கல்லூரி மாணவியை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவியை கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கேரளாவின் எர்ணாகுளம் வாழக்குளத்தில் பட்டதாரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜுலை 30ஆம் தேதி நிமிஷா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிஜு மொல்லா (44) குற்ற4) குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாரம்பள்ளியில் உள்ள எம்இஎஸ் கல்லூரியில் பிபிஏ படித்து வந்த நிமிஷா, கொள்ளை முயற்சியின் போது பிஜுவால் படுகொலை செய்யப்பட்டார்.
Tags :