தேர்தல் ஆணையம் ஆளும் பாஜக அரசின் "அடிமை" அல்லது "ரப்பர் ஸ்டாம்ப்" போல செயல்படுகிறது.-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

by Admin / 26-11-2025 12:18:03am
தேர்தல் ஆணையம் ஆளும் பாஜக அரசின்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,தேர்தல் ஆணையம் ஆளும் பாஜக அரசின் "அடிமை" அல்லது "ரப்பர் ஸ்டாம்ப்" போல செயல்படுவதாக அவர் சாடியுள்ளார்.. "தேர்தல் ஆணையம் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும், பாஜகவின் ஆணையமாக அல்ல" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பான பணிகளைச் சுட்டிக்காட்டி அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.. 
..நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், பா.ஜ.கவின் அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகவும், உண்மையான வாக்காளர்களை, குறிப்பாகச் சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் போன்ற சமூகத்தினரை பட்டியலில் இருந்து நீக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி காரணமாக ஏற்பட்ட பணிச்சுமை மற்றும் அழுத்தம் காரணமாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்  சிலர் மரணமடைந்துள்ளதாகவும், இதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார்..ஒரு தகுதியான வாக்காளர் கூட நீக்கப்பட்டால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும், 2029-ல் ஒன்றிய ஆட்சியில் இருந்து பாஜக தூக்கி எறியப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். .இது குறித்து அவர் தலைமை தேர்தல் ஆணையருக்குக் கடிதமும் எழுதியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க மறுத்துள்ளது.. 

 

Tags :

Share via