பாட்டாளி மக்கள் கட்சிக்கே உண்மையான வெற்றி! - ராமதாஸ்

by Staff / 13-07-2024 03:51:02pm
பாட்டாளி மக்கள் கட்சிக்கே உண்மையான வெற்றி! - ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கே உண்மையான வெற்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,255 வாக்குகளை குவித்திருக்கிறார். இது 2024 மக்களவைத் தேர்தலில் பாமகவிற்கு கிடைத்த 32,198 வாக்குகளை விட 75 விழுக்காடு அதிகம். ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு 56,261 வாக்காளர்கள் பாமகவிற்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்திற்கும், பா.ம.க.வின் மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றி ஆகும்" என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo