ரயில் மூலம் வந்த 2,600 டன் உரம் லாரிகள் மூலம் அனுப்பிவைப்பு. 

by Staff / 31-08-2025 10:00:19am
ரயில் மூலம் வந்த 2,600 டன் உரம் லாரிகள் மூலம் அனுப்பிவைப்பு. 

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா சாகுபடிக்காக 2,600 டன் உர மூட்டைகள் நேற்று வந்தன. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தஞ்சை ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயிலில் 21 பெட்டிகளில் 1,300 டன் யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்கள் வந்தன. பின்னர், லாரிகளில் ஏற்றப்பட்டு, தஞ்சை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளிலுள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கும்பகோணத்திற்கு 1,300 டன் உர மூட்டைகள் வந்தன.

 

Tags : ரயில் மூலம் வந்த 2,600 டன் உரம் லாரிகள் மூலம் அனுப்பிவைப்பு. 

Share via