அரக்கோணம் ரயில் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல். 2 பேர் கைது.

அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெளி மாநிலத்தை சேர்ந்த நபர்கள் சிலர் கஞ்சா கடத்துவதாக,அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில், நேற்று ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரோகித் குமார், சப்- இன்ஸ்பெக்டர் பழநி மற்றும் பாதுகாப்பு படையினர் 2 குழுக்களாக பிரிந்து ரயில் நிலையம் மற்றும் நடைமேடைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது,1 வது நடைமேடை அருகே சந்தேகப்படும் வகையில் பெரிய டிராலி பேகுடன் 2 வாலிபர்கள் அங்கும், இங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.உடனடியாக,அவர்களை பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரித்ததில், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் பால்(27) மற்றும் இப்ராகிம் கலீல் உல்லா (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும், அவர்களிடமிருந்த பேகை சோதனை செய்தனர். அதில், தலா 2 கிலோ விதம் 15 பொட்டலங்களில் 30 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 15 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.உடனடியாக அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : அரக்கோணம் ரயில் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல். 2 பேர் கைது.