கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் அசைவ உணவகங்கள், பாஸ்ட்புட் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் த மாவட்டம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் தாராபுரம் பகுதி உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் சிரஞ்சீவி பாலமுருகன் கோடீஸ்வரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தாராபுரம் பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை அலங்கியம் சாலை ஐந்து சாலை சந்திப்பு ஆகிய பகுதியில் உள்ள உணவகங்கள், பாஸ்ட்புட் கடை, ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.இதில் அதிக செயற்கை வண்ணம் கலக்கப்பட்ட 3-கிலோ சிக்கன் 2-கிலோ அளவுள்ள பரோட்டா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட3-கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.பிறகு பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு ரூ. 6-ஆயிரம் அபராதம் விதைக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Tags :