மருத்துவர்களுக்கு அபராதம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

by Staff / 23-09-2023 04:42:46pm
மருத்துவர்களுக்கு அபராதம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எனப்படும் கொசுவினால் பரவுகிறது. சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். சுகாதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதனிடையே தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. இதேபோல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வகைப்படுத்தப்பட்ட தொற்றுநோய் தொடர்பான விவரங்களை அனைத்து மருத்துவர்களும் அந்தந்த பகுதி அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via