கடல்களும் நம்மை பிரித்தாலும் மொழியும் இனமும் நம்மை இணைக்கிறது -முதலமைச்சர் மு.க .ஸ்டாலின்

by Admin / 12-01-2026 02:03:46pm
கடல்களும் நம்மை பிரித்தாலும் மொழியும் இனமும் நம்மை இணைக்கிறது -முதலமைச்சர் மு.க .ஸ்டாலின்

சென்னை நத்தம் பக்கத்தில் அயலகத் தமிழர் தினம் 2026 மாநாட்டை நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இரண்டு நாள் நடைபெறும் என் மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு நாடுகளும் கடல்களும் நம்மை பிரித்தாலும் மொழியும் இனமும் நம்மை இணைக்கிறது என்ற உரையோடு பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்ற அயலக தமிழர்களுக்கு பல்வேறு துறைகளில் அவர்களின் பங்களிப்பை பாராட்டி விருதுகளை வழங்கி கௌரவித்தார். தமிழால் இணைவோம் உலகுடன் உயர்வோம் என்ற வாசகத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாட்டில் எழுவதற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்று உள்ளனர். மாநாட்டில் தமிழ் கலாச்சாரம் இலக்கியம் மற்றும் வணிகம் சார்ந்த 252 அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடல்களும் நம்மை பிரித்தாலும் மொழியும் இனமும் நம்மை இணைக்கிறது -முதலமைச்சர் மு.க .ஸ்டாலின்
 
Tags :

Share via