கிராம பூசாரிகளின் நலன் கருதி 11 அறிவிப்புகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.
இன்று சென்னை மயிலாப்பூரில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற கிராம கோவில் பூசாரிகள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.. அப்பொழுது அவர் கிராம பூசாரிகளின் நலன் கருதி 11 அறிவிப்புகளை வெளியிட்டார்.. கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதம் ,1500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தகுதியான பூசாரிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 4,000 ஆகவும் ஆண்டு வருமான வரம்பு ஒரு லட்சத்திலிருந்து 1.25 லட்சமாக உயர்வு .ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு புதிய ஆடைகள் வழங்கப்படும் என்றும் பூசாரிகளின் மறைவிற்கு அவர்களது சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ஐம்பதாயிரத்திலிருந்து 75 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதியில் உள்ள கோவில் புனரமைப்பு நிதி 2.5 லட்சம் ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. பூசாரிகளுடைய வீட்டு பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை மற்றும் குடும்ப நல நிதி உதவி போன்ற நலத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.. இவ்விழாவில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு உள்ளிட்டரும் கலந்து கொண்டனர்.
Tags :


















