ஆளுநர் ரவி மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 17-09-2023 12:47:47pm
ஆளுநர் ரவி மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி ட்வீட் செய்துள்ள அவர்," மாண்புமிகு பாரத பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் பிறந்தநாள் வாழ்த்துகள். தேசம் விஸ்வகுரு ஆவதற்கு அதை வழிநடத்த அவருக்கு நல்ல ஆரோக்கியமும் ஊக்கமளிக்கும் தலைமைத்துவத்திற்காகவும் பிரார்த்தனைகள்" என குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதிலும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via