நவீன் பட்நாயக் சகோதரி மறைவு - முதல்வர் இரங்கல்

by Staff / 17-09-2023 12:53:45pm
நவீன் பட்நாயக் சகோதரி மறைவு - முதல்வர் இரங்கல்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். "இலக்கியம் மற்றும் சினிமாவுக்கு கீதா மேத்தாவின் பங்களிப்பு மகத்தானது; நவீன் பட்நாயக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். பிரபல எழுத்தாளரும், ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரியான கீதா மேத்தா வயது மூப்பு காரணமாக டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 80. அவர் தனது மகனுடன் வசித்து வந்த நிலையில், நேற்று காலமானார்.

 

Tags :

Share via