இனி  ஹோர்முஸ் ஜலசந்தி முந்தைய நிலைமைக்கு திரும்பாது - ஈரான்

by Admin / 27-04-2026 12:35:09pm
இனி  ஹோர்முஸ் ஜலசந்தி முந்தைய நிலைமைக்கு திரும்பாது - ஈரான்

இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை இரத்தானதை தொடர்ந்து ஈரான் ஹோர்முஸ் ஜல சந்தியை மூடும் தம் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை இரண்டு சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 107.58 டாலராகவும் அமெரிக்கா கச்சா எண்ணெய் தொண்ணூத்தி 96.360 ஆகவும் விலை அதிகரித்து உள்ளது. அமெரிக்காவின் இந்த போக்கு இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையை குறைப்பதாக ஈரான் அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், இனி  ஹோர்முஸ் ஜலசந்தி முந்தைய நிலைமைக்கு திரும்பாது என்றும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க பேச்சு வார்த்தை இரத்தானதை தொடர்ந்து உலக அளவில் எரி சக்தி நெருக்கடிக்கு ஆளாகும் நிலை உருவாகும். ஏனெனில் 20% எண்ணெய் போக்குவரத்து ஹோர்முஸ் ஜல சந்தி வழியாக நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo