இந்த முறை அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளேன்- தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.

ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப் 8) சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்தபடி செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனது வெளிநாடு பயணத்தை எதிர்கட்சிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் எதற்கு வெளிநாடு பயணம் என புலம்பி வருகிறார்கள். எனது பயணத்தின் வெற்றியால் ஜெர்மனி முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருவதாக உறுதி அளித்துள்ளனர்“இதுவரை மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களை விட இந்த முறை அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளேன். மனநிறைவோடு சென்னை திரும்பியுள்ளேன். 33 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 17,613 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்” என்றார்.
Tags : இந்த முறை அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளேன்- தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.