மம்தா இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறார்

by Staff / 06-02-2024 03:57:18pm
மம்தா இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறார்

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு பாஜகவை தோற்கடிக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இதனையடுத்து அவர் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில், மேற்குவங்க முதல்வர் மம்தா INDIA கூட்டணியில்தான் இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார் மட்டுமே INDIA கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories