ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்

by Staff / 21-03-2024 03:19:31pm
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்

நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என எவ்வாறு கூற முடியும்? உங்கள் ஆளுநர் என்ன செய்கிறார் ? என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை, உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். இந்த நிலையில், அமைச்சராக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்து விட்டார்.இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என எவ்வாறு கூற முடியும்? உங்கள் ஆளுநர் என்ன செய்கிறார்? என தலைமை நீதிபதி சந்திர சூட் அதிருப்தி தெரிவித்தார். இந்த வழக்கில் பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை கெடு விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories