வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்

by Editor / 19-09-2021 11:00:46am
வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், இதனை உலகறிய செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி கோரப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதனையேற்று சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகரித்து, புதிய கேலா இந்தியா திட்டத்தின் கீழான விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல் என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினை சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த அங்கீகாரம் தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர், ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via