தமிழகத்தில் இன்றுமுதல் மழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அடுத்த இன்றுமுதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்று காரணமாக, அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிர்த்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Tags : rain at tamilnadu












jdjnscasd.jpg)






