பெரம்பூர் பகுதி அதிமுக பிரமுகர் இளங்கோ மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.

சென்னை பெரம்பூரைச் சார்ந்த இளங்கோவன். இவர் அதிமுகவின் பெரம்பூர் பகுதி தெற்குச் செயலாளராக இருந்து வருகிறார் நேற்று இரவு கக்கஞ்சி காலனி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அலுவலகத்தை மூடிவிட்டு மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார், அப்பொழுது அங்கு வந்து எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் இளங்கோவனை வழிமறித்து சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் தலை மற்றும் முகத்தில் வெட்டுக்காயம் அடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார். இது குறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடல் கூறு பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் அதிமுகவினர் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சிறுவன் உட்பட 5 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். அவர்களிடமிருந்து இருந்து பட்டாக்கத்திகள் மற்றும் ஒரு ஆட்டோ உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்த கொலைக்குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Tags :