எக்ஸ்த்தளத்தில் பதிவிட்ட பதிவை அவசர அவசரமாக நீக்கிய ஆதவ். 

by Staff / 30-09-2025 09:53:52am
எக்ஸ்த்தளத்தில் பதிவிட்ட பதிவை அவசர அவசரமாக நீக்கிய ஆதவ். 

தவெக-வின் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ”சாலையில் நடந்து சென்றாலே தடியடி ,சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்” என்றார். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே பதிவை நீக்கினார்.
 

 

Tags : எக்ஸ்த்தளத்தில் பதிவிட்ட பதிவை அவசர அவசரமாக நீக்கிய ஆதவ். 

Share via