எப்.ஐ.ஆரில் விஜய்யின் கட்சியின் பெயர் மாற்றம் சர்ச்சை.

கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி FIR எனப்படும் முதல் தகவல் அறிக்கையில் ’தமிழக வெற்றிக் கழகம்’ என்பதற்கு பதிலாக ‘தமிழக மக்கள் கட்சி’ என தவறுதலாக பதிவிடப்பட்டுள்ளது. நாடே உற்றுநோக்கிய சம்பவத்தில் இந்த தவறு நடந்துள்ளது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
Tags : எப்.ஐ.ஆரில் விஜய்யின் கட்சியின் பெயர் மாற்றம் சர்ச்சை.