தமிழகத்தில் இன்று கனமழை 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட்.
தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனிக்கு ரெட் அலர்ட்.நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகருக்கு ஆரஞ்ச் அலர்ட்.மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் , நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இதன்தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் மீட்ப்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.மாவட்ட நிர்வாகத்தால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கால செயல்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அனைத்து நகரம், கிராமம், பேரூராட்,சி பகுதியில் மக்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து துறை அதிகாரிகள் அந்தந்த கிராமங்களில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், அரசு மருத்துவமனை, கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், மேலும் சேதங்கள் ஏற்பட்டால் அதனை தடுக்கும் பொருட்டு சாக்கு மூட்டையில் மணல்,தீயணைப்பு இயந்திரங்கள், தீயணைப்பு அலுவலர்கள்,மரங்களை வெட்டி அகற்றும் இயந்திரங்கள், ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் இதர மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மின் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள அவசர சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட்.