10,000 நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

by Editor / 28-05-2024 09:30:43am
10,000 நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதாலும் தொடர் கனமழை காரணமாகவும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதாலும் தொடர் மழை காரணமாகவும் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் காற்றின் வேகம் குறைந்ததை தொடர்ந்து இன்று (மே 28) நெல்லை கூட்டப்புளி, இடிந்தகரை உள்பட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10,000 நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

 

Tags : நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

Share via