ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அறிவிப்பு
1 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Tags :