சத்தியேந்திர ஜெயினுக்கு 6 வார காலம் ஜாமீன்

by Staff / 26-05-2023 02:42:40pm
சத்தியேந்திர ஜெயினுக்கு 6 வார காலம் ஜாமீன்

கடும் நிபந்தனைகளுடன் டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார காலம் ஜாமீன் வழங்கியுள்ளது டெல்லி நீதிமன்றம். சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக கூறி, கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் இருக்கும் அவருக்கு, மருத்துவ காரணங்களை கூறி டெல்லி நீதிமன்றத்தில் சத்யேந்திர ஜெயின் தரப்பு ஜாமீன் கோரியிருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், டெல்லியை விட்டு வெளியே செல்ல கூடாது சாட்சியங்களை சந்திக்க கூடாது உள்ளிட்ட கடும் நிபந்தனைகள் விதித்து நீதிபதிகள் 6 வார காலம் ஜாமீன் வழங்கினர்.

 

Tags :

Share via

More stories