டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

by Admin / 28-08-2026 12:58:59am
டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

இன்று டாஸ்மாக் ஊழியர்கள் கால வரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு ஆயத்தி தேர்வு துறை அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் டாஸ்மாக் கூட்டு நடவடிக்கை குழு தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது அடுத்து ஆகஸ்ட் 31ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெறும் மதுவிலக்கு மற்றும் ஆயத்துவத்துறை மானிய கோரிக்கையின் போது ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து நல்ல அறிவிப்புகள் வெளியிடப்படும் என அமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டத்தை ஆகஸ்ட் 31 வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தன. டாஸ்மாக் ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல் ஊழியர்களுக்கு காலம் வரை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் திட்டத்திற்காக கூடுதல் பணியாளர்களை நியமிப்பது தனியார் மயமாக்கல் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo