தமிழகத்தில்5 மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

by Admin / 27-08-2026 12:42:06am
தமிழகத்தில்5 மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மதுரை ,சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் மேற்கு மலை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னல் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo