நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்- பனிச்சரிவு காரணமாக, கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு.
நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்- பனிச்சரிவு காரணமாக, கடுமையான திடீர் வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரால் நேபாளத்தில் இதுவரை 95-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர். வட மத்திய நேபாளத்தின் திபெத் எல்லையை ஒட்டியுள்ள ராசுவா மாவட்ட திமுரே, சியாப்ருபெசி பகுதிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.லேட்டஸ்ட் செயற்கைக்கோள் தரவுகளின்படி, எல்லையிலுள்ள பனிப்பாறை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு/பனிச்சரிவு காரணமாகப் பெருமளவிலான பனிக்கட்டிகளும் பாறைகளும் போதே கோஷி ஆற்றில் விழுந்து அடைப்பை ஏற்படுத்தின. இந்த இயற்கை அணை திடீரென உடைந்ததால் மிகக் குறுகிய நேரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் பெருவெள்ளம் உருவானது.
இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி பல கிராமங்கள், 19 பாலங்கள் மற்றும் 11 நீர்மின் நிலையங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
நேபாள சுற்றுலா வாரியத்தின்படி, கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் மலையேற்றத்திற்குச் சென்ற 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தற்போது வரை மாயமாகியுள்ளனர். இந்த வெள்ளத்தில் சிக்கியவர்களில் 57 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்களில் 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது..
நேபாள ராணுவம் மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிகத் தீவிரமான மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேபாள பிரதமர் பாலவேந்திர ஷாவைத் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், இந்தியா தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என உறுதியளித்துள்ளார்.
சிக்கியுள்ள இந்தியர்களைப் பத்திரமாக தாயகம் அழைத்து வர இந்திய ராணுவத்தின்சி -17 ,சி-130 ரக சிறப்பு விமானங்கள் நேபாளத்திற்கு அனுப்பப்பட உள்ளன.
Tags :



















