இன்று இரவுக்குள் 2 ரயில் பாதைகள் சீராகும் ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா,

by Staff / 04-06-2023 02:59:15pm
இன்று இரவுக்குள் 2 ரயில் பாதைகள் சீராகும் ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா,

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா, “ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பஹாநாகா ரயில் நிலையத்தில், இன்று இரவு 8 மணிக்குள், 2 ரயில் பாதைகள் முழுமையாக தயாராகிவிடும். இந்த 2 ரயில் பாதைகளிலும், முதற்கட்டமாக ரயில்கள் மெதுவாக இயக்கப்படும் என நம்புகிறேன்” என தகவல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories