ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகார வழக்கு இன்று விசாரணை.

by Editor / 18-04-2024 08:49:02am
 ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகார வழக்கு இன்று விசாரணை.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி திருநெல்வேலி தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வாக்காளர்களுக்கு கொடுக்க இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும், தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

 

Tags : ரூ.4 கோடி பறிமுதல்

Share via

More stories