ஒரே மாதத்தில் 60,000 பேர் பலி
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. அந்நாட்டு அரசாங்கம் பூஜ்ஜிய கொரோனா கொள்கையையும் கடந்த மாதம் 8ம் தேதி வாபஸ் பெற்றது. இந்நிலையில் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம், கடந்த டிசம்பர் 8 முதல் ஜனவரி 12ம் தேதி முதல் 59,938 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது. இதில் 5503 பேர் சுவாச பிரச்சனையாலும், 54,435 பேர் பிற காரணங்களாலும் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் 65 வயதுக்கும் மேல் உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :