98 பட்டாசு ஆலைகளுக்கு சுற்றறிக்கை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துக்கள் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது. இதனால், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 98 பட்டாசு ஆலைகளின் போர்மேன், சூப்பர்வைசர்கள் பயிற்சியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயற்சி முடிக்க தவறினால் செப்டம்பர் மாதம் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரைக்கபடும் என சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதார பயிற்சி மைய இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Tags :