திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் நாளை சனிக்கிழமை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் உச்ச நீதிமன்ற அமர்வு-உத்தரவு.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூரில் கார்த்திகை தீபம் ஏற்றது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம் பஞ்சோலி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர், மதுரை மாவட்ட ஆட்சியர், அறங்காவலர் குழுவினர் உள்ளிட்ட 13 பேருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியதோடு இவர்கள் அனைவரும் டிசம்பர் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
. சனிக்கிழமை நவம்பர் 28ஆம் தேதி உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து சுடர் எடுத்து மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்கிற உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளதோடு கோவில் நிர்வாகம் தனது கடமையில் தவறிவிட்டதாகவும் சுப்பிரமணியசாமி கோவில் அறங்காவலர் குழுவை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளதோடு கோவில் நிர்வாகத்தை கவனிக்க முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ் வைத்தியநாதன் வி. பார்த்திபன் ஆகியோர்களை நிர்வகிக்க ஆணையிட்டதோடு தமிழக காவல்துறை நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறியதால் திருப்பரங்குன்றம் மலை மற்றும் கோவில் பாதுகாப்பு பொறுப்பை மத்திய ரிசர்வ் காவல் படையிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டதோடு இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுக்கு இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் குறும் செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றை தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தீபம் ஏற்றுவது தனது பணி அல்ல என்றும் கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவின் ஒத்துழைப்பு குறித்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்ததோடு மாவட்ட நிர்வாகி என்ற முறையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது ஆட்சியரின் முழு கடமை என்றும் நீதிபதிகள் தொிவித்தனர்.
Tags :



















