தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு

by Editor / 11-07-2025 04:44:29pm
தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட வழக்கில் ஹேமராஜை குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் கோவை - திருப்பதி ரயிலில் பயணித்தபோது பாலியல் ரீதியாக அத்துமீறிய ஹேமராஜ் கீழே தள்ளியதில் 36 வயது கர்ப்பிணி படுகாயமடைந்தார். ஹேமராஜ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. அவருக்கான தண்டனை விபரங்கள் ஜூலை 14-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via