பெண் இன்ஸ்பெக்டருடன் நெருக்கமாக இருந்த டிஎஸ்பி

by Staff / 15-10-2022 11:54:07am
பெண்  இன்ஸ்பெக்டருடன் நெருக்கமாக இருந்த டிஎஸ்பி

திருச்சி ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசுதேவன் பெண் இன்ஸ்பெக்டருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த புகைப்படம் குறித்து பெண் காவலர் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். அதில், டிஎஸ்பி பரவாசுதேவன் இதேபோல் பல பெண் காவலர்களுக்கு பல ஆபாச படங்களை அனுப்பி உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து டிஎஸ்பி பரவாசுதேவனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜீயபுரம் டிஎஸ்பி கூடுதல் பொறுப்பாக குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo