தற்காலிக பெண் ஊழியரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக...

by Admin / 12-11-2025 07:35:56am
தற்காலிக பெண் ஊழியரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக...

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் பணிபுரிந்த தற்காலிக பெண் ஊழியரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து, உதவி இயக்குநர் அறிவழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஓட்டப்பிடாரம் வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் அறிவழகன் மீது பாலியல் தொந்தரவு மற்றும் ஆபாசமாகப் பேசியதாக புகார் அளித்துள்ளார்.அறிவழகன் அந்தப் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசும் ஆடியோவும் வெளியானது.மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பாலியல் தொந்தரவு உண்மை எனத் தெரியவந்ததையடுத்து, அறிவழகனை பணியிடை நீக்கம் செய்து சென்னை வேளாண்மைத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அறிவழகன் ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்தபோது மதுபோதையில் பணியில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via