தொடர் மழை காரணமாக நள்ளிரவில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் தொடரும் தடை.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது இதன் தொடர்ச்சியாக குற்றால மெயினருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி புலியறிவு உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துக் கொட்டத் தொடங்கியது தொடர்ந்து நள்ளிரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல்துறை தடை விதித்தது இதன் தொடர்ச்சியாக குற்றாலம் பேரருவியில் நள்ளிரவில் திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு இரண்டாவது பாதை வரை தண்ணீர் கொட்டியதால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயணைப்பு துறையினர் அந்த பகுதியில் இருந்து அகன்று மாற்றி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து குறைந்தாலும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டி வருவதால் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தற்காலிகமாக பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு காவல்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags : தொடர் மழை காரணமாக நள்ளிரவில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் தொடரும் தடை.