காவல் நிலைய மரணங்கள் எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று-உள்துறை செயலாளர் தீரஜ்குமார்

by Admin / 12-03-2026 11:43:31pm
காவல் நிலைய மரணங்கள்  எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று-உள்துறை செயலாளர் தீரஜ்குமார்

காவல் நிலைய மரணங்கள் என்பது எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று என்று தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் காவல் நிலைய மரணங்கள் குறித்து மாநில அரசின் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். காவல் நிலையங்களில் உயிரிழப்புக்கள் ஏற்படக் கூடாது என்பதே தமிழக அரசின் உறுதியான கொள்கை என்றும் மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்படும் காவலர்கள் மீது பாரபட்சம் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்ததோடு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் நடைபெற்ற அஜித்குமார் போன்ற விசாரணை கைதிகளின் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories