சங்கரன்கோவிலில் பக்தர்கள் மீது போலீஸ்  தாக்குதல் இந்துமுன்னணி கண்டனம்.

by Editor / 25-02-2023 11:56:27pm
சங்கரன்கோவிலில் பக்தர்கள் மீது போலீஸ்  தாக்குதல் இந்துமுன்னணி கண்டனம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு வருமாறு:

சங்கரன்கோவிலில் கோவிலுக்குள் சாமி கும்பிட்டு திரும்பிய பக்தர்கள் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான பக்தர்களை கைது செய்ய செய்த புளியங்குடி டிஎஸ்பி அசோக்  உள்ளிட்ட தென்காசி மாவட்ட  காவல்துறையினரின் செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது,
தென்காசி மாவட்ட காவல்துறை திக மற்றும் திமுகவின் கைப்பாவையாக செயல்படுவதை காட்டுகிறது.
புளியங்குடி டிஎஸ்பி அசோக் ஒரு மாதத்திற்கு முன்பு சேர்ந்தமரத்தில் இந்துக்கள் கோவில் ஊர்வலத்தின் போதும் இதே போல அராஜகமாக தாக்குதல் நடத்தியுள்ளார்,கடவுள் மறுப்பாளர் வீரமணி பொதுக்கூட்டத்தை கோமதியம்மன் கோவில் அருகில் நடத்துவதற்காக கோவிலில் இருந்து வெளியே வந்தவர்களை எல்லாம் அடித்து காயப்படுத்திய காவல்துறையின் அராஜக செயலை கண்டித்தும்  தொடர்ந்து இந்துக்கள் மீது அராஜகமாக தாக்குதல் நடத்தி வரும் டிஎஸ்பி அசோக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,
 வருகிற 28.2.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு சங்கரன்கோவில் கழுகுமலை ரோடு அக்னி காளியம்மன் கோவில் முன்பு மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்,நெல்லை கோட்டம் முழுவதிலிருந்து இந்துக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via