தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு பேரவையினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு பேரவை தலைவர் ராஜசேகர் செயலாளர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெற்று அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசு பணியிடங்களில் பணியாற்றிய வழிவகை செய்யப்படும் என்றும் உலகப் புகழ்பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் அலங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்தமைக்காகவும் மேலும் உள்ளூர் காளைகளும் வீரர்களும் பங்கு பெறுவதை உறுதி செய்திட ஏதுவாக ஆன்லைன் பதிவு முறையினை மாற்றி அந்தந்த மாவட்ட அளவில் முடிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு கட்டாயம் என்ற விதி தளர்த்தப்படும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களிடம் முத்திரைத்தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழி பத்திரம் என்ற நடைமுறை ரத்து செய்யப்படும் என்றும் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காகதமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Tags :


















.jpg)
