சபாநாயகர் அப்பாவும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு
தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இடையிலான சந்திப்பு இன்று நிகழ்ந்தது. தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவின் அறையில் ஓ .பன்னீர்செல்வம் மற்றும் திமுக அமைச்சர் பி. கே. சேகர் பாபு ஆகியோர் சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடித்தது .2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தி.மு.கவில் இணைந்து வருவதால், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஓ.பி.எஸ் . இணைவது குறித்தோ அல்லது அரசியல் ஆதரவு குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Tags :


















.jpg)
