ஆப்கனிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் பேச தடை

பெண்களின் குரல் 'வசீகரமாக' கருதப்படுவதாக கூறி அவர்கள் பொதுவெளியில் பேசுவது, பாடுவது, சத்தமாகப் படிப்பதையும் தடை செய்து தாலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், திருமணம் மற்றும் இரத்த உறவு இல்லாத ஆண்களைப் பார்க்க அனுமதி இல்லை என்றும் இனி முகம் உட்பட முழு உடலையும் பொது இடங்களில் மறைக்க வேண்டும் என்றும் பெண்களுக்கு தாலிபான்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆண் மருத்துவர்களிடம் செல்லக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
Tags :