தமிழகத்தில்  பாஜக ஆட்சிக்கு வரும்போது ரூ.2500-க்கும் அதிகமாக மகளிர் உரிமைத்தொகை  அண்ணாமலை தகவல்.

by Editor / 12-03-2025 09:41:54pm
தமிழகத்தில்  பாஜக ஆட்சிக்கு வரும்போது ரூ.2500-க்கும் அதிகமாக மகளிர் உரிமைத்தொகை  அண்ணாமலை தகவல்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் தீய சக்தியை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டமானது பாஜகவினர் சார்பில் நடைபெற்ற வரும் நிலையில், இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது,

நாட்டிற்காக போராடியவர்கள் மற்றும் விளையாடிவர்கள் என பல்வேறு தரப்பினார்கள் இன்று பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அவர்கள் இணைந்ததற்கு முக்கிய காரணம் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் அது பாஜகவால் மட்டுமே முடியும் என்பதால் தற்போது இணைந்துள்ளனர்.

தற்போதைய சூழலில், நல்ல குழந்தைகளை கூட திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் சந்தேகப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணம் போதை பொருட்கள் புழக்கம் என்பது அதிகமாக இருப்பதால் நமது குழந்தைகளை நாமே சந்தேகப்பட வேண்டிய சூழலுக்கு தற்போது தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எந்த துறைகள் எடுத்து கொண்டாலும் லஞ்ச லாவண்யம் மற்றும் ஊழல் இல்லாத துறையையே பார்க்க முடியாது என்பது தற்போதைய நிலைமை.

தமிழகத்தில் தற்போது உள்ள 9.5 லட்சம் கோடி கடனை எதிர்காலத்தில் வரக்கூடிய இரண்டு தலைமுறையினால் கூட அடக்க முடியாத சூழலுக்கு தற்போது தமிழகம் உள்ளது.

எதிர்கால தலைமுறையினரை உருவாக்கக்கூடிய 238 ஆசிரியர்கள் திமுக ஆட்சி ஏற்ற நாள் முதல் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

உலக தரத்திலான கல்வியை ஏழை மக்களும் பெற வேண்டும் என்பதற்காக ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற பெயரில் ஜவஹர்லால் நவோதயா பள்ளி தொடங்க மத்திய அரசு திட்டமிட்ட நிலையில் பல்வேறு மாநிலங்களில் இந்த நவோதயா பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஒரு பள்ளிகள் கூட வரவில்லை.

இந்தப் பள்ளிகளில் பயின்று வரும் பல்வேறு குழந்தைகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் நவோதயா என்ற பெயரில் தான் திமுகவினருக்கு பிரச்சனை என்றால் நாங்கள் காமராஜர் பெயரில் அந்த பள்ளிகளை கொண்டு வருகிறோம் ஏற்றுக்கொள்ள தயாரா என மத்திய அரசு கேட்டுள்ளது.

நவோதயா பள்ளிகள் வேண்டாம், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் வேண்டாம் ஆனால் அரசு பள்ளிகளில் எந்த விதமான கட்டமைப்புகளும் இல்லாமல் மழை நீர் வடியும், பிறகு எப்படி குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியும், தமிழகத்தில் நம்மை ஆளுகிறவர்களுக்கு படிப்பறிவு இல்லை என்கின்ற நிலையில், நம் குழந்தைகளுக்காவது நல்ல படிப்பறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாஜக தேசிய கல்விக் கொள்கையை கையில் எடுத்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய பொருளாதர ஆதரவாக விளங்கக்கூடிய விவசாய நிலத்திற்கு 47 சதவீத விவசாய நிலத்திற்கு உரிய தண்ணீர் கிடைப்பதில்லை. 

செண்பகவல்லி அணையின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய உரிய நீரை பெறுவதற்காக அப்போது முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் கேரளாவிற்கு நிதி கொடுத்து உடனடியாக தண்ணீர் கொண்டுவர முயற்சி செய்தார்கள்.

ஆனால், தற்போது தமிழக முதலமைச்சர் தண்ணீர் கொண்டு வருவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல், சாராயம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

5 முறை கேரளாவிற்கு தமிழக முதலமைச்சர் சென்றபோது, இது தொடர்பாக ஒரு வார்த்தைகள் கூட பேசவில்லை.

நாளை கூட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேரளாவிற்கு செல்ல உள்ள நிலையில், அவரிடம் கூட நமது தென்காசி தொகுதிக்கு தேவையான தண்ணீரை தர கேரளா அரசை வலியுறுத்த ஒரு அறிவுரை கூட முதலமைச்சர் வழங்கவில்லை.

தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் பாராளுமன்றத்தில் 23 கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில், தென்காசிக்கு தேவையான ஒரு கோரிக்கைகள் கூட கேட்காமல் எங்கேயோ உள்ள மணிப்பூரை பற்றி பேசுகிறார்.

தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள மாட்டார். அவருக்கு தெரிந்த ஒரே விஷயம் ஹிந்தி மட்டுமே.

கடந்த 4 ஆண்டுகளில் 9,492 சிறு, குறு நிறுவனங்கள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மின் பற்றாக்குறை.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தின் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானம் 48% உயர்ந்துள்ளது.

தென்காசிக்கு இதுவரை 4 முறை நான் வந்துள்ள நிலையில், ஒவ்வொருமுறை வரும்போதும் தென்காசியில் ஒவ்வொரு மலை காணாமல் போகிறது. இதற்கு முக்கிய காரணம் திமுக அரசு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான லாரிகளில் அனுமதி இல்லாமல் கனிம வளங்கள் கடத்தப்படுகிறது.

மத்திய அரசால் ஒருபோதும் மொழி திணிப்பு திணிக்கப்படாது. அவர்கள் விருப்பப்பட்ட மொழியை கற்றுக்கொள்வதற்காக தான் தேசிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போது 2500-க்கும் அதிகமாக மகளிர் உரிமைத்தொகை நாங்கள் கொடுப்போம்.
 

 

Tags : தமிழகத்தில்  பாஜக ஆட்சிக்கு வரும்போது ரூ.2500-க்கும் அதிகமாக மகளிர் உரிமைத்தொகை  அண்ணாமலை தகவல்.

Share via