பிளாக்ஷிப் பிராசஸருடன் ரியல்மி பேட் 5ஜி மாடல்
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி பேட் 5ஜி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மி பேட் 5ஜி மாடல் இரண்டு வெவ்வேறு பிராசஸர்களுடன் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல்களை பிரபல டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு உள்ளது.
அதன் படி ரியல்மி அறிமுகம் செய்யப் போகும் பெரிய சாதனமாக ரியல்மி பேட் 5ஜி மாடல் இருக்கும் என தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த டேப்லெட் மாடலின் ப்ரோடோடைப் வெவ்வேறு பிராசஸர்களை கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி பேட் 5ஜி மாடலின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட வேரியண்ட் LCD ஸ்கிரீன், 2.5K ரெசல்யூஷன் கொண்டிருக்கும் மற்றும் 8360mAh பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
புதிய ரியல்மி பேட் 5ஜி மாடல் ஸ்டைலஸ் சப்போர்ட் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ரியல்மி பேட் 5ஜி மாடலின் மற்றொரு வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த வேரியண்ட் உடனே அறிமுகம் செய்யப்படுமா அல்லது ரியல்மி பேட் 5ஜி மாஸ்டர் எக்ஸ்புளோரர் எடிஷன் பெயரில் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்படுமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
Tags :