ரூ.10 லட்சம் கோடி கடனை உருவாக்கிவிடுவார்கள்"- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை (ஜன., 24) முதல் நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், ‘மைக்’ சின்னத்தில் வாக்களிக்க கோரி, 38, 39, 40வது வார்டுகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய சீமான், அரசை நடத்துபவர்கள் தரம் கெட்டவர்களாக இருப்பதால் பல காலமாக அரசும் தரம் கெட்டு கிடக்கிறது.மேலும் அவர் பேசுகையில்
“வரும் சட்டமன்ற தேர்தலின்போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 என திமுக வாக்குறுதி அளிக்கும்; ஆட்சியிலிருந்து இறங்குவதற்குள் தமிழ்நாட்டின் கடனை ரூ.10 லட்சம் கோடியாக உருவாக்கிவிடுவார்கள்”
ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரையின்போது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
Tags : ரூ.10 லட்சம் கோடி கடனை உருவாக்கிவிடுவார்கள்"- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.