நடிகர் ரஜினியுடன் ஓ.பி.எஸ்.சந்திப்பு-2026 தேர்தல்  வியூகமா..?

by Editor / 01-01-2025 11:29:26pm
நடிகர் ரஜினியுடன் ஓ.பி.எஸ்.சந்திப்பு-2026 தேர்தல்  வியூகமா..?

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை ஓபிஎஸ் சந்தித்து பேசி வருகிறார். உடல்நலம் குறித்து விசாரிக்கவும், புத்தாண்டு வாழ்த்து சொல்லவும் ஓபிஎஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பின் பின்புலத்தில் அரசியல் இருக்காது என்று உறுதியாக சொல்ல முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தல் கணக்கு, பாஜக கூட்டணி உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்.கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.புத்தாண்டு நல்வாழ்த்துகள். என தனது எக்ஸ் தளபதிவில் நடிகர் ரஜினிகாந்த்  தெரிவித்திருந்தநிலையில்..இன்று இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Tags : நடிகர் ரஜினியுடன் ஓ.பி.எஸ்.சந்திப்பு-2026 தேர்தல்  வியூகமா..?

Share via