பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வு செய்த தந்தை கைது.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் 36 வயதான தந்தை தனது 15 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த தந்தையை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து புறநகர் டிஎஸ்பி.சிபிசாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி தனிப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் காவலர்கள் மணிகண்டன், ஜஸ்டின் குபேந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் இன்று பழனியில் பதுங்கி இருந்த தந்தையை கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags : பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வு செய்த தந்தை கைது.