பாரம் தாங்காமல் கவிழ்ந்த லாரி

by Staff / 19-12-2022 04:17:30pm
 பாரம் தாங்காமல் கவிழ்ந்த லாரி

திண்டுக்கல் பழனி பைபாஸ் நான்கு வழி சாலை பிரிவில் தூத்துக்குடியில் இருந்து மடத்துக்குளம் நோக்கி பழைய பேப்பர் கட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் லாரி டிரைவர் சண்முகத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. லாரி ஓரத்தில் கவிழ்ந்ததால் போக்குவரத்துக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்படவில்லை. போக்குவரத்து போலீசார் லாரி அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். லாரியில் அதிக அளவு பாரத்தை ஏற்றி வந்தது தாங்காமல் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via
Logo