தமிழக வெற்றிக்கழகம்-அதிமுகவோடு கூட்டணி இல்லை .

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக மாநாடு விழுப்புரம் விக்ரவாண்டி வி. சாலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடந்து முடிந்ததிலிருந்து அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகள் தொடர்ந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையும் தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் நேரடியாக எதிரியாக அறிவித்ததோடு நாம் தமிழர் கட்சியை புறந் தள்ளிச் சென்ற நிகழ்வும் அரசியல் விவாத பொருளாகியது
. ஊழலின் காரணமாக சிறைச்சென்ற அ.தி.மு.க பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து எதுவும் பேசாமல் கடந்து சென்று விட்டாா், விஜய். அதிமுகவோடு கூட்டணி சேரப் போகிறார் என்கிற தகவல்கள் வெளி வந்தன. மாநாடு முடிந்து மூன்று வாரங்கள் கழிந்த பின்பு நேற்று வரை அதிமுகவோடு வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கைகோர்ப்பார் விஜய் என்கிற பேச்சு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்
, 60 இடங்கள் 80 இடங்கள் துணை முதலமைச்சர் பதவி என்றெல்லாம் பேசப்பட்டு வந்ததோடு ஐம்பது கோடி நூறு கோடி என்கிற பேரம் சார்ந்த பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. இந்நிலையில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் அதிமுகவோடு கூட்டணி இல்லை என்பதாக ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார்.
இதனால் அதிமுகவைச் சார்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் இடையில் ஒரு ஏமாற்றமான ஒரு சூழல் நிலவுவதாக சொல்கிறார்கள். எப்படியும் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தோடு இணைந்து பாமக, தேமுதிக இன்னவரை கட்சிகளோடு இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிற எண்ணத்தில் மிதந்தவர்களுக்கு இது பேரிடியாக அமைந்தது.
அதிமுகவோ இல்லை தமிழக வெற்றிக்கழகமோ தனித்தனியாக நின்றாலும் திமுகவை வெல்வது என்பது கூட்டணி பலமற்ற கட்சிகளால் சாத்தியமில்லை.
திமுக அனைத்து நிலைகளிலும் தங்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்தி பூத் கமிட்டி அமைத்து வேலைகளை முடுக்கி விட்டு விட்ட நிலையில், ஒரு மாநாடு தவிர வேறு எந்த களப்பணியும் செய்யாத தமிழக வெற்றி கழகம் . எந்த முகமும் விஜயை, பு ஸ்சி ஆனந்தை தவிர அறிமுகமாகவில்லை
. பல்வேறு பணிகள் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஒரு சில தேர்தல்கள் சந்தித்த பின்பு வேண்டுமானால், இவர்களால் குறைந்த பட்சம் தனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய நிலையை அடைய முடியும். தவிர முழுமையான ஒரு வெற்றியை தமிழக வெற்றி கழகம் இன்னும் ஒன்னரை ஆண்டுகளுக்குள் நிகழ்த்துமா என்றால் அது கேள்விக்குறிதான்.
திமுகவின் தேர்தல் வியூகம் அலாதியானது. மிஷா போன்ற காலங்களை தொடர்ந்து... ஏற்பட்ட உள்கட்சி பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தும் அது இன்னும் தன்னை உயிர்ப்போடு வைத்திருக்கின்ற இயக்கம். அதை சாதாரணமாக அசைத்து அப்புறப்படுத்தி விடலாம் என்று நினைப்பது அவ்வளவு எளிதான காரியம் அன்று.
பதினெட்டில் இருந்து 25 வயது இளைஞர்கள் தமிழக வெற்றி கழகத்தில் அதிகமாக இருக்கலாம். ஆனால் பல்வேறு அனுபவங்களை பெற்று அரசியல் வாழ்விலே ஊறிப் போனவர்கள் அதிகம் கொண்ட இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கி வருகிறது. அவ்வியக்கத்தை கருத்துக்களாலோ -களத்தில் இறங்கி போராடுவதில்லாலோ -மிக எளிதாக வீழ்த்தி விட முடியா மாபெரும் இயக்கம். இதை காலம் பல்வேறு நிலைகளில் புலப்படுத்தி உள்ளது.
எம்ஜிஆரை பார்க்க வேண்டும் என்பதற்காகவும் கலைஞரின் பேச்சைக் கேட்க வேண்டும் என்பதற்காகவும் பல மைல்கள் தொலைவு நடந்து ஊனின்றி, உறக்கம் இன்றி சென்ற கூட்டங்கள் போல .,...இன்றைய அரசியலை முன்னெடுத்த தலைவர்களுக்கு சூழல்கள் வருமா என்று சொல்வதற்கு இல்லை.
1967- இல் அசுரத் தரமான பலம் பெற்ற திமுக இன்றளவும் அதன் கட்டமைப்பை -இறுக்கத்தை வலுவாக தமிழகத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றது
. ஆட்சியில் இருக்கின்றவர்கள் மீது வழக்கமான வசை பாடல்கள் இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்த ஆட்சியில் தான் தமிழகம் வட மாநிலங்களை விட வளர்ந்தும் செழித்து இருக்கிறது என்பதை எவரும் மறுதலித்து விட முடியாது
. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று திராவிட முன்னேற்றக் கழக தலைவர்களே சொல்லிக் கொண்டிருந்த நிலையில் மாறி இன்று தெற்கு வளர்கிறது, வடக்கு தேய்கிறது என்று சொல்லுமளவிற்கு ..லட்சக்கணக்கான வட இந்தியர்கள் தமிழகத்தில் வேலை வாய்ப்பை பெற்று -நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய வருவாயை பெற்று... தங்கள் மாநிலத்திற்கு அனுப்பி தங்கள் உறவுகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் மறந்து விட முடியாது:.மறைத்துவிட முடியாது. அதனால் திமுகவை மிக எளிதாக புதிய கட்சிகள் சாய்த்தோ- வீழ்த்தியோ விட முடியாது என்பது நிதர்சனம்.
Tags :