செயின் திருடனை மடக்கி பிடித்த போலீஸ்

by Staff / 26-11-2022 05:30:23pm
செயின் திருடனை மடக்கி பிடித்த போலீஸ்

டெல்லியில் காவலர் ஒருவர் திருடனை பிடிக்கும் சாகச வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 2 நாட்களுக்கு முன் டெல்லியில் உள்ள ஷாஹாபாத் பகுதியில் திருடன் ஒருவன், பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை பரித்துகொண்டு ஓடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்யேந்திரா என்ற கான்ஸ்டபிள் அந்த பகுதியில் சோதனைக்கு சென்றபோது, மர்ம நபர் ஒருவர் முகத்தில் கைக்குட்டையை கட்டியபடி பைக்கில் சென்றது தெரிந்தது. இதையடுத்து பைக்கில் திருடனை துரத்து சென்ற அவர், கீழே விழுந்து சாகசம் செய்து திருடனை மடக்கி பிடித்தார்.

 

Tags :

Share via