கட்டுபாடற்ற கனிமவளம் ஏற்றி செல்லும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துக்கள் அச்சத்தில் மக்கள்.

by Editor / 28-03-2023 10:25:28am
கட்டுபாடற்ற கனிமவளம் ஏற்றி செல்லும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துக்கள் அச்சத்தில் மக்கள்.

தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் மற்றும் குமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டு காலமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கனரக வாகனங்களில் 10 சக்கரங்கள் முதல் 22 சக்கரங்கள் வாகனங்கள் வரை அளவுக்கு அதிகமான அளவில் கனிம வளங்களை தென்காசி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், விருதுநகர் மாவட்டம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வருகின்றது, இதில் கேரளாவைச் சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்திலேயே தார் மிக்ஸ் பிளாண்ட் (சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தார் கலவை தொழிற்சாலைகளை)  இங்கே துவக்கி வைத்து இங்கிருந்து தார் கலவைகளையும் ஜல்லி.எம்.சாண்ட் போன்றவைகளையும் இரவில் கொண்டு சென்று வருகின்றனர், இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தென்காசி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வழியாக சிலாத்திகுளம் பகுதியில் கல்குவாரியில் இருந்து அதிக கனிமவளங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று அந்த வழியே இருசக்கரவாகனத்தில் பள்ளிக்கு சென்ற ஆசிரியை மீது மோதியதில் ஆசிரியர் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார், இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் தகவல் அறிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநில மாநிலத்திற்கு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களால் மனித உயிர்கள் காவு வாங்கப்படும் நிலை நீடித்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே உயிர் பலிகளை தடுக்க முடியும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டுபாடற்ற கனிமவளம் ஏற்றி செல்லும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துக்கள் அச்சத்தில் மக்கள்.
 

Tags :

Share via